Thursday, February 18, 2010

கடவுள் வணக்கம்

அஞ்சேலெ னுங்கரந்தனை - அடி
சாயப் புடைக்கிறேன் என்று
மிஞ்சி விட்டாய் விதியே நீ - என்னை
மீறி விட்டாய் விதியே நீ
அஞ்சாத நெஞ்சத் துணிவால் - அருள்
ஆற்றல் என்னும் கடலுள்ளே
பஞ்சப் பசி பிணி இன்றி தெய்வ
பக்திப் படகினிற் சென்றேன்!

பிஞ்சும் அரும்பும் உதறும் - முது
பிஞ்சும் கனியும் உதிரும்
அஞ்சுதல் என் மட நெஞ்சே!
அசடாகி புலம்புதல் வேண்டா
வஞ்சனை நீ செய்ததுண்டா? - பிறன்
வாழ்க்கை நியதியை மாற்றுதல் நன்றா?
சஞ்சலம் விட்டொழி கென்றான் - அருட்
சக்திகனல் ஆகிய கண்ணன்!


Post a Comment

3 comments:

  1. அருமை தோழி...
    எதுகை, மோனை, இயைபு எல்லாம் அமைந்தது அருமை அருமை...
    சிந்துப் பாவுக்குச் சொந்தக்காரி நீ!

    //பிஞ்சும் அரும்பும் உதறும் - முது
    பிஞ்சும் கனியும் உதிரும்//
    இதன் பொருள் என்ன?

    ReplyDelete
  2. இதுல கும்மக்கூடாது.. உம்மாச்சி கண்ணை குத்திடும்

    ReplyDelete