Monday, May 30, 2011

பெண்ணே நீ!

பெண்ணே! இனியவளே! கேளம்மா! - தூய
பெண்மையினால் இவ்வுலகை ஆளம்மா!
மண்ணே மணமாகும் உன்னாலே! - இதை
மறந்தால் துயராகும் எந்நாளும்!

ஆசைகள் நிறைந்தது வாழ்வம்மா! - வீண்
ஆசை தருவதோ தாழ்வம்மா!
நாசமாய் செய்வன தாம்நீக்கி - இந்த
நானிலம் வளமுறச் செய்யம்மா!

படித்திட வேண்டும் முறையாக! - நீ
புகழுற வேண்டும் நிறைவாக!
படிப்பது போலொரு சுகமில்லை! - கல்வி
போலொரு காக்கும் நலனில்லை!

கொண்டவன் தன்னைப் போற்றிடுக! - வாழ்வில்
கருத்துடன் கடமை ஆற்றிடுக!
வண்டமிழ் போன்று நீ வாழ்ந்திடுக! - வையம்
வளத்தி னுள்ளே ஆழ்ந்திடுக!




Post a Comment

3 comments:

  1. எளிமையான சொற்களைக் கொண்டு செய்த
    அருமையான கவிதை
    வாய்விட்டு சப்தமாக
    இரண்டு மூன்றுமுறை படித்து ரசித்தேன்
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அழாமான கருத்துக்கள்.
    இக்கருத்துக்களை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.
    நன்றி

    ReplyDelete
  3. SO NICE I REFLECTED MORE ON THIS CONGRATES

    ReplyDelete