Wednesday, June 8, 2011

உன்னை நம்பு!

பஞ்ச பூதங்களின்
தொகுப்பப்பா நீ - உனக்குள்
வேறு பூதங்கள் எதற்கு?

சந்தர்ப்பங்கள் துரத்தியதால்
சங்கடத்திடம் அகப்பட்டவனா
நீ!

தாழ்வு மனப்பான்மையால்
வாழ்வில் தள்ளாடுபவனா
நீ!

சோகங்கள் சுட்டுச்சுட்டுச்
சோர்ந்து போனவனா
நீ!

சாய்ந்து கொள்ள
தோள்கள் தேடித் திரிந்தவனா
நீ!

நீ யாரானால் என்ன?

முதலில் உன்
சங்கடங்களை வழித்து
சகதியில் எறி!

கண்ணீரைத் துடைத்தெறி
விழிகளை அகலப்படுத்தி
உலகினைப் பாரு!

எழுந்து நட!

உனக்கும் வழி கிடைக்கும்!
உன்னை நம்பு!
உழைப்பை நம்பு!

குறிவைத்து வைத்து
இலக்கின் எல்லையை - உன் பாதம்
சென்று சேரட்டும்!

பிறகு தேடு நண்பனே
நீயும் சாய்ந்து கொள்ள
உனக்கும் தோள் கிடைகும்!




Post a Comment

9 comments:

  1. அருமை! மிகவும் நன்று

    ReplyDelete
  2. எழுந்து நட
    உனக்கும் வழி கிடைக்கும்
    எவ்வளவு பெரிய விஷயத்தை
    எவ்வள வு எளிமையாக சொல்லிப் போகிறீர்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை அருமை. ...

    ReplyDelete
  4. நீ யாரானால் என்ன?

    முதலில் உன்
    சங்கடங்களை வழித்து
    சகதியில் எறி!//
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Replies
    1. தன்னம்பிக்கை தரும் வரிகள்.

      Delete