Thursday, April 29, 2010

.....?....

பட்டினியால் தினமிங்கு வாடிப் - பலர்
பரிதவிக்கிறார் உணவினைத்தேடி
கொட்டம் அடிக்குது ஒரு கூட்டம் - அது
கொலு பொம்மையாய் இருப்பதில் - பெருநாட்டம்.

இம்மென்றால் இருட்டறை வாசம் - மீறி
ஏனென்றிடில் உயிர் நாசம்
பொம்மையா நீ இங்கு சொல்லு - அந்தப்
பொய்யரைப் பாடையில் அள்ளு.

சுற்றியே நிக்குது பேய்கள் - மண்ணைச்
சுடலை மேடாக்குது தீகள்
முற்றுகைக்குள் எங்கள் மூச்சா - உயிர்
பெற்ற சுதந்திர வீச்சா?


Post a Comment

2 comments:

  1. நெத்தியடி வரிகள்!!
    தோழி! தொடருங்கள்!

    ReplyDelete
  2. இன்றைய நிலையை
    யதார்த்தமான வரிகளில்
    அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்..

    ReplyDelete