Sunday, October 3, 2010

தனித்தமிழாட்சி மலரட்டுமே...


தனித்தமிழ் இன்பத்தேனாகும்! - அது
. . . . தருதல் என்றும் சீராகும்!
தனித்தமிழ் சிதைந்தால் கேடாகும்! - அது
. . . . தமிழ்மொழிக் கென்றும் தீதாகும்!

தனிதமி ழாட்சி தீதல்ல! - இங்கு
. . . . சிலரதை எதிர்ப்பது சீரல்ல!
இனிமையே தமிழின் வளமாகும்! - இங்கு
. . . . இருப்பன தமிழின் நலனாகும்!

தனித்தமி ழின்றேல் தமிழ் கெடுமே! - மிக
. . . . செந்தமிழ் நாளும் துயர்படுமே!
தனித்தமிழ் காப்போர் வளரட்டுமே - இங்கு
. . . . தனித்தமி ழாட்சி மலரட்டுமே!


Post a Comment

7 comments:

  1. நல்லா இருக்கு.....அடிக்கடி செய்யுள் எழுதுங்க... எனக்கும் சொல்லி குடுங்க..எப்படி எழுதறதுன்னு..:)

    ReplyDelete
  2. தோழி உங்கள் கவிதை நல்லா இருக்கு, அதை விட அழகு உங்கள் செய்யுள் உரை நடை, எல்லாத்தையும் விட அழகு நீங்கள் எடுத்து கொண்ட தலைப்பு. உலகெல்லாம் பரந்து வாழற தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லைதான்... ஆனால அது கிடைக்கும் எங்களுக்கு, அப்போ உங்கள் கனவு நனவாகும். என்னும் நிறைய கவிதைகள் எழுதுங்க

    ReplyDelete
  3. அடடா..!! அருமைங்க ரொம்ப நல்லாயிருக்கு..!!

    ReplyDelete
  4. தமிழ் நேசிக்கும் தமிழே.., வாழ்த்துகிறேன். இப்படி பட்ட மனிதர்களுக்காகத்தான் எத்தனை நாள் தவம்.? இயற்கையின் கொடை உங்களை எனக்கு அறிமுகப்படுத்திற்று. நன்றி. நல்ல தமிழ்ப் பேசப் பட வேண்டும். பேணப்பட வேண்டும். சில மொழிப் பற்று இல்லாத மனிதர்கள் "சுயநலம்" மட்டுமே வாழ்க்கை என நினைத்து தொடர்ந்து தமிழுக்குத் துரோகம் செய்து வருகிறார்கள். தமிழ் அவர்களை மாற்றும். தனித்தமிழ் நாடு கேட்டேன் நான். நீங்கள் ஆட்சி மொழியாய் தமிழ்க் கேட்கிறீர்கள். நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மிகவும் அருமையான கவி, அதுவும் தமிழுக்கு தொடருங்கள் உங்கள் கவி வரிகளை

    ReplyDelete
  6. தோழிக்கு தமிழ் செய்யுள் எல்லாம் நல்லாதான் வருது... ஆனா எனக்கு தூக்கம் தான் வ்ருது.. ஹி ஹி

    ReplyDelete