Monday, July 4, 2011

அஞ்சாங்கிளாஸ் லீடர்!

பங்கஜம் டீச்சருக்கு
பாயாசம் வைக்க பாசிப்பருப்பு
பல்விளக்க ஆலங்குச்சி
அடுப்பெரிக்க பருத்திமாரு

பத்மா டீச்சருக்கு எலந்த பழம்
கோணப் புளியங்கா
பிரசிடண்டு வீட்டு பசுப்பால்
எஸ்தரக்கா வீட்டு ரணிமுத்து

கண்ணுசாமி வாத்தியாருக்கு
காய்ஞ்சகடலை கத்திரிக்கா முருங்கக்கா
கீழக்கடை அரிசி முறுக்கு

இத்தனையும் அலைந்து வாங்கி
பள்ளிக்கூடம் போய் சேரும்போது மணி அடித்து
வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்

பலமாதமாய் இந்த கதைதான் நடக்கிறது
ஏனோ வகுப்பறையில் நுழையும் வாய்ப்பே
கிடைக்கவில்லை ஆறுமுகத்திற்கு..

அட்டெண்டென் மட்டும் சரியாய் விழுந்துவிடும்
அந்த ஐந்தாம் கிளாஸ் லீடருக்கு..

படிக்க முடியாத வருத்தம் அவனுக்கு
ஒரு வேளை பாஸானால்
வருத்தம் வாத்தியார்களுக்கு!!

Post a Comment

7 comments:

  1. ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டிய கவிதை ...... அருமையான விமர்சனம், ....

    ReplyDelete
  2. கவிதை நல்லாத்தான்இருக்கு
    ஆனால்
    எல்லா ஆசிரியர்களும் இப்படி இல்ல.
    நல்லவங்களும் இருக்காங்க. ஆசிரியர்கள் தெய்வம் மாதிரி.
    சிலரின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி
    உதாரணமா சொல்லுறதென்றால் - ஒரு ஆசிரியரிடம் படித்த மாணவர் வைத்தியர் ஆகலாம் ஆனால் ஆசிரியர் வைத்தியம் பார்க்க முடியாது. அவர் ஒரு ஏணிப்படி.

    ReplyDelete
  3. கவிதை நல்லாத்தான்இருக்கு
    ஆனால்
    எல்லா ஆசிரியர்களும் இப்படி இல்ல.
    நல்லவங்களும் இருக்காங்க. ஆசிரியர்கள் தெய்வம் மாதிரி.
    சிலரின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி
    உதாரணமா சொல்லுறதென்றால் - ஒரு ஆசிரியரிடம் படித்த மாணவர் வைத்தியர் ஆகலாம் ஆனால் ஆசிரியர் வைத்தியம் பார்க்க முடியாது. அவர் ஒரு ஏணிப்படி.

    ReplyDelete
  4. கவிதை நல்லாத்தான்இருக்கு
    ஆனால்
    எல்லா ஆசிரியர்களும் இப்படி இல்ல.
    நல்லவங்களும் இருக்காங்க. ஆசிரியர்கள் தெய்வம் மாதிரி.
    சிலரின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி
    உதாரணமா சொல்லுறதென்றால் - ஒரு ஆசிரியரிடம் படித்த மாணவர் வைத்தியர் ஆகலாம் ஆனால் ஆசிரியர் வைத்தியம் பார்க்க முடியாது. அவர் ஒரு ஏணிப்படி.

    ReplyDelete
  5. கவிதை நல்லாத்தான்இருக்கு
    ஆனால்
    எல்லா ஆசிரியர்களும் இப்படி இல்ல.
    நல்லவங்களும் இருக்காங்க. ஆசிரியர்கள் தெய்வம் மாதிரி.
    சிலரின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி
    உதாரணமா சொல்லுறதென்றால் - ஒரு ஆசிரியரிடம் படித்த மாணவர் வைத்தியர் ஆகலாம் ஆனால் ஆசிரியர் வைத்தியம் பார்க்க முடியாது. அவர் ஒரு ஏணிப்படி.

    ReplyDelete
  6. உண்மை தான் தோழி... இது போன்ற வாத்தியார்கள். இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்... தனது தொழிலின் புனிதத்தை உணராமல்... அருமையாக நையாண்டியுடன் சொன்ன விதம் அசத்தல்...

    ReplyDelete