Monday, May 30, 2011

பெண்ணே நீ!

பெண்ணே! இனியவளே! கேளம்மா! - தூய
பெண்மையினால் இவ்வுலகை ஆளம்மா!
மண்ணே மணமாகும் உன்னாலே! - இதை
மறந்தால் துயராகும் எந்நாளும்!

ஆசைகள் நிறைந்தது வாழ்வம்மா! - வீண்
ஆசை தருவதோ தாழ்வம்மா!
நாசமாய் செய்வன தாம்நீக்கி - இந்த
நானிலம் வளமுறச் செய்யம்மா!

படித்திட வேண்டும் முறையாக! - நீ
புகழுற வேண்டும் நிறைவாக!
படிப்பது போலொரு சுகமில்லை! - கல்வி
போலொரு காக்கும் நலனில்லை!

கொண்டவன் தன்னைப் போற்றிடுக! - வாழ்வில்
கருத்துடன் கடமை ஆற்றிடுக!
வண்டமிழ் போன்று நீ வாழ்ந்திடுக! - வையம்
வளத்தி னுள்ளே ஆழ்ந்திடுக!



Monday, November 8, 2010

நவ நாகரீகம்...

முடியை சீர்படுத்தி..
முகத்தை மழித்து..
உடம்பை குளித்து..
ஆடையைச் சலவை செய்து..
காலணியைப் பளபளப்பாக்கி..
அழகாய் அணிந்து கொண்டான்..
ஆனால்,
மனதை மட்டும்..???


Sunday, October 24, 2010

நாம் காளான்கள்..

அழகிய காளான்
ஒன்று
ஆலமராத்தடியில்
குற்றுயிராக
அறுபட்டுக்
கிடந்தது...
எனக்கோ கவலை
காளான் மீதல்ல..
நம்மீது..!!

Sunday, October 3, 2010

தனித்தமிழாட்சி மலரட்டுமே...


தனித்தமிழ் இன்பத்தேனாகும்! - அது
. . . . தருதல் என்றும் சீராகும்!
தனித்தமிழ் சிதைந்தால் கேடாகும்! - அது
. . . . தமிழ்மொழிக் கென்றும் தீதாகும்!

தனிதமி ழாட்சி தீதல்ல! - இங்கு
. . . . சிலரதை எதிர்ப்பது சீரல்ல!
இனிமையே தமிழின் வளமாகும்! - இங்கு
. . . . இருப்பன தமிழின் நலனாகும்!

தனித்தமி ழின்றேல் தமிழ் கெடுமே! - மிக
. . . . செந்தமிழ் நாளும் துயர்படுமே!
தனித்தமிழ் காப்போர் வளரட்டுமே - இங்கு
. . . . தனித்தமி ழாட்சி மலரட்டுமே!

Thursday, July 15, 2010

பூ நகை...

புன்னகையே
முகம்....
பூ..!

Thursday, July 8, 2010

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...





நண்பர் பாலா & செல்வி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி கீதை இன்று தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்...

இணையம் தந்த நட்பு....
இனிய குட்டி சகோதரிக்கு...


இதயம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்...
வாழிய பல்லாண்டு...


Thursday, June 17, 2010

வரதட்சணை...

சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்...