Tuesday, October 11, 2011

எனக்குள்ளேயே என் எதிரி..!!

எனக்குள்ளேயே
என் எதிரி
விவேகம் இல்லாத
வேகத்தில்...

சகிப்புத்தன்மை இல்லாத
திகைப்பில்...

நினைத்தது நடக்காத
மனகசப்பில்...

நடந்ததை ஏற்காத
மடமையில்...

விரக்தியில்...
வேதனையில்...
அதிகாரத்தில்...
ஆணவத்தில்...

என்னையே அந்நியனாக்கிட
எனக்குள்ளேயே என் எதிரி.

சினம்..
சிந்திக்கமறுக்கும்.

அச்சில் ஏறாத
அர்ச்சனைகளையும்
உச்ச வரம்பில்லா
நச்சு மொழிகளையும்
ஊர்வலம் அனுப்பும்.

போன பிறகுதான் தெரியும்
வந்தது மயில் அல்ல
புயல் என்று.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
பாய் போட்டு
பந்தி விரிக்காது.

சினம் குணமல்ல
மனம் சம்பந்தபட்டது.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
ஆவேசக் குரங்கு
வழி பார்த்துப் போகும்
பழி பாவம் இன்றி.




Post a Comment

14 comments:

  1. கவிதை ரொம்ப அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை..அருமை...அருமை

    ReplyDelete
  3. நம்முள்ளே இருக்கும் மனம் சில நேரம் எதிரியாக திகழ்வதால் தான் வாழ்வில் தடுமாற்றாம் ... அதை அழகாக கவிதையில் கலக்கிவிட்டீர்கள்..

    ReplyDelete
  4. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

    ReplyDelete
  5. எதிரி ,நண்பர்கள் என்று நம்முள் நம்மை பிரிக்கமுடியுமா , பிளவுண்டமனம் , முரண்பட்ட நிலை ,நீடித்த ஆசைகளின் நினைவுகளின் மீதான எண்ணம் இந்த இருமை நிலைக்கு தள்ளுகிறது . ஷனதில் வாழும் மனதின் எண்ணங்களில் இல்லை இருமை நிலை ...........

    ReplyDelete
  6. மனதின் ஆழம் செல்ல செல்ல
    இருளின் சுவடுகள்
    நம்மை தடுமாறச் செய்யும்...
    இருளின் தன்மை அறிந்துவிட்டால்
    எளிதில் மனம் வசப்படும்
    எண்ணியது எண்ணியபடி
    நடந்து வரும் நம்மோடு ...
    இரண்டு பட்ட குணம்
    கரைந்து போகும் ...

    ReplyDelete
  7. ''...ஐந்து நிமிடம்
    வாய்மூடி இருந்தால்
    ஆவேசக் குரங்கு
    வழி பார்த்துப் போகும்
    பழி பாவம் இன்றி..'''
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  8. மிகவும் சிறப்பான நறுக்கு இன்றுதான் உங்களின் இந்த" பா " வ்ரங்கையும் காண்கிறேன் சிறப்பு பாராட்டுகள்; உள்ளத்தை பழக்கும் வித்தையை மிகவும் சிறப்பாக படம் பிடித்து எங்கள் முன்வைகிறீர்கள் இது நமக்கு தேவையான பாடம் .

    ReplyDelete
  9. sariyana varthaikal. Opt words.

    ReplyDelete