Friday, February 19, 2010

என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

நச்சுப் பொடியைத்
தூவிவிட்டது ஹெச்1என்1
மூச்சுத் திணறலில்
உலக நாடுகள்
சங்கூது கின்றன

பங்குச் சந்தைகள்
திவாலாகின்றன
திமிங்கிலங்கள்

கரியமிலவாயு மிகையாம்
துருவங்கள் உருகலாம்
கடல்மட்டம் உயரலாம்
கலவரப்படுகிறது உலகம்

ஓசோன் படிவத்தில்
ஓட்டைகளாம்
ஒளி இழக்கப்போகின்றன
விழிகள்

வெடித்துச்
சிதறியது விமானம்
கடலுக்கடியில்
தேடப்படுகின்றன
சடலங்கள்
இதைப் பற்றியெல்லாம்
எனக்கில்லை கவலை

என் காப்பிக்கு
எவ்வளவு சர்க்கரை
என் கழுத்துச் சுளுக்கு
என் வீட்டுத்
தண்ணீர்க்குழாயில் கசிவு
இவைகள் மட்டுமே இப்போது
என்னுடைய கவலை

பூமித்தாயின்
பொறுப்பற்ற பிள்ளை நான்
தகுதியுள்ள யாராவது என்னைச்
சவுக்கால் அடியுங்கள்...!


Post a Comment

2 comments:

  1. 'தகுதியுள்ள ' என்ர வார்த்தையை எடுத்துவிட்டால்
    நிறையப் பேர் தயாராக இருப்பார்கள் தோழி

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா..!!

    ReplyDelete