Friday, February 19, 2010

விட்டில் பூச்சிகள்...

கணினி வலைப்பின்னல் தனில்
உலகம் சுருங்கி விட்டது.

தேவைகள் ஏனோ
அதிகரித்துக் கொண்டே போகிறது....

கைகளில் சிணுங்குகிறது
கையடக்கமாய் தொலைபேசி...

வாய் முணுமுணுக்கிறது
புரியாத பாசையில் துள்ளிசைப்பாடல்...

நம்நாட்டுக் கால நிலைக்கு
சற்றேனும் ஒத்துவராத ஆடைகள்...

புருவம் முதல் தொப்புள் வரை
விதவிதமாய் ஆபரணங்கள்...

ஆறாம் விரலாய் பேனாவின் இடத்தில்
சில நொடி வாழும் புகைத்தல் சாதனங்கள்...

இவ்வாறெல்லாம்
நாகரீக முக மூடியணிந்து புன்னகைக்கிறது...

மை தடவிய இதழால்
இன்றைய சமுதாயம்...

மேலை நாட்டவரின்
வாழ்வியல் கோலம் தனை
நவ நாகரீகம் என நம்பும்
இவர்கள்
ஒளி வீசும் விளக்கை நாடிச்செல்லும்
விட்டில் பூச்சிகள்...!!!


Post a Comment

1 comment:

  1. தோழி அவங்கப்பா கிட்டே கம்மலோ ஜிமிக்கியோ கேட்டிருக்கு.. அப்பா திட்டீட்டார் போல.. ஹி ஹி

    ReplyDelete