Wednesday, March 3, 2010

காதல் ஒரு வியாதி

இன்று
நாடெங்கிலுமுள்ள
வியாதி

ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான
வியாதி

அரசனையும்
ஆண்டியையும்
பகைவளர்க்கும் வியாதி

மாணவனின்
கல்வியைக் கெடுத்த
வியாதி

இளைஞரின்
லட்சியத்தைச் சிதைத்த
வியாதி

மரபுடனும்
மரபை மீறியும்
வளர்ந்த வியாதி

மொத்தத்தில்
மருந்தில்லா..
மரணத்தைக் கொடுக்கும்
வியாதி


Post a Comment

17 comments:

  1. தோழி காதலை அதிகமாக வெறுக்கிறீர்கள் போல. காதலால் பலர் வாழ்க்கையில் மேன்மையும் அடைந்துள்ளனர்..

    ReplyDelete
  2. தோழி காதல் ஒரு அனுபவம், வியாதி ஆகுவது,மருந்தாவது நம் கையில் தான்..

    ReplyDelete
  3. காதல் ஒரு வியாதி - சிலருக்கு.
    காதல் ஒரு மருந்து - சிலருக்கு.
    உங்கள் கவிதை அருமை.

    ReplyDelete
  4. மிக்க நன்றி...

    ReplyDelete
  5. //ஆணுக்கும் பெண்ணுக்கும்
    பொதுவான
    வியாதி//
    அருமை!

    ReplyDelete
  6. சரியாகச்சொன்னீர்கள் தோழி...

    அர்த்தம் பொதிந்த கவி வரிகள்...

    ReplyDelete
  7. பலவியாதிகளை சுமந்திருக்கும் காதலுக்கு எது வியாதி? [சும்மா தோழி]

    அழகான காதல் வியாதி...

    ReplyDelete
  8. மிக்க நன்றி...ஜான் கார்த்திக் ஜெ

    ReplyDelete
  9. மிக்க நன்றி...அகல்விளக்கு

    ReplyDelete
  10. மிக்க நன்றி...அன்புடன் மலிக்கா,

    ReplyDelete
  11. தோழி நீக நெனகிறது ரொம்ப ரம்பா தப்பு....
    காதல் என்பது ஒரு உண்ணதமான் உணர்வு.....
    காதல் என்பது தாய்மைக்கு நிகரான புனிதமான உறவு...
    ப்ளீஸ் தயவு செய்து அதை இந்த மாதிரி விமர்சிக்க வேண்டாம் !

    ReplyDelete
  12. Kaadhalai patri sariyaa koora oru anubavam vendum...!

    ReplyDelete
  13. அருமையான கவிதை தோழி அவர்களே!

    இருப்பினும் காதல் ஒரு தவறான காரியம் அல்ல.
    அது இயல்பான காரியம்.

    எனினும், காதலர்கள் பலர் தறவு செய்கின்றார்கள் என்பது தான் உண்மை.
    சில உண்மைகளை உணர்ந்துகொண்டால் வாழ்வில் வசந்தங்களே.

    இருப்பினும் தற்காலத்தில் காதலில் எச்சரிக்கை வேண்டும்.

    ReplyDelete
  14. காதல் என்பது ஒரு வியாதி தான்... என்னையும் ஆட்கொள்ள நினைத்தது... ஆனால் இறைவன் அந்த வியாதியை அருகே நெருங்க விடாமலே அதன் வீரியத்தை உணர வைத்துவிட்டான்...

    ReplyDelete
  15. இங்கு நீங்க சொல்லி இருப்பது உண்மை ஆனால் இந்த வியாதி வந்து அனுபவித்து தான் அனைவரும் தெளிவாகின்றனர் :)

    ReplyDelete