Saturday, March 20, 2010

பணி செய்குவோம்...!

சொந்தப் பணி செய்து சுகத்தில் மிதப்போரை
மங்கப் பணி செய்குவோம் - பெயர்
தங்கப் பணி செய்குவோம்!

நற்பணி எப்பணி அப்பணி செய்வோரை
நாடித் துணை யிருப்போம் - புகழ்
பாடித் துணை யிருப்போம்!

எங்கள் பணியுடன் ஏதும் பொதுப்பணி
ஒன்றேனும் செய்திடுவோம் - அதை
நன்றெனச் செய்திடுவோம்!

எங்கும் பசிப்பிணி இல்லை என்னும்படி
நல்லநிலை அமைப்போம் - பசி
வெல்லும் நிலை சமைப்போம்!

மனிதம் எனப்படும் மாண்புறு தத்துவம்
வாழட்டும் நல்லபடி - இனி
மாளட்டும் தொல்லைகளே!


Post a Comment

10 comments:

  1. சொல் விளையாடலும் பொருள் விளையாடலும் உங்களுக்கு நன்றாக வருகிறது.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Finally, I managed to read all ur post. I agree with Sukumar. Keep writing Thozhi =))

    ReplyDelete
  3. மிக்க நன்றி...

    ReplyDelete
  4. //
    எங்கும் பசிப்பிணி இல்லை என்னும்படி
    நல்லநிலை அமைப்போம் - பசி
    வெல்லும் நிலை சமைப்போம்!
    //
    மிக்க நன்று

    ReplyDelete
  5. மிக்க நன்றி...

    ReplyDelete
  6. நன்றாக உள்ளது உங்களது கவிப்பணி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. மிக்க நன்றி...

    ReplyDelete
  8. மிகவும் அருமை, சகோதரம்.

    சகோதரியை அறிந்திட யான் என்ன தவம் செய்தேனோ?!

    ReplyDelete
  9. மிக்க நன்றி..

    ReplyDelete