Monday, May 17, 2010

எனதன்புத் தந்தையே...!!

அன்புப் பொய்கையாய்
அடைக்கலக் கோட்டையாய்
பற்றுக் கோடாய்
பாதுகாவலாய்
என் விடியலுக்கு வித்திட்ட
இதய சூரியனே...!

நடக்கவே தெரியாத
என்னை
வானில்
சிறகடிக்க வைத்த
இதய தெய்வமே...!

நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே...!

என்னக்காக
நீர் செய்த
தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது
எனதன்புத் தந்தையே...!!


Post a Comment

10 comments:

  1. அன்புத்தந்தைக்கு ஒரு கவிப்பரிசு...

    அருமை...

    ReplyDelete
  2. நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. கவிதை நன்று.

    ReplyDelete
  4. உங்க அப்பாட்ட காட்டுங்க ரொம்ப சந்தோஷபடுவாறு.

    ReplyDelete
  5. ரொம்ப அருமையா.. யதார்த்தமா.. எழிதியருக்கீங்க...! பாராட்டுகள் தோழி..!

    ReplyDelete
  6. ஹை.. அப்பாவுக்கு ஒரு கவிதை!
    எல்லாரும் அம்மாவுக்கு தான் கவிதை
    எழுதுவாங்க!
    வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete
  7. அப்பாவிற்கான கவிதை பாசத்தால் இளையோடியுள்ளது அருமை தொடருங்கள் தோழி

    ReplyDelete
  8. அப்பாவை பற்றின கவிதை அருமை தோழி

    ReplyDelete
  9. ம்ம்

    நடக்கவே தெரியாத
    என்னை
    வானில்
    சிறகடிக்க வைத்த
    இதய தெய்வமே...!
    // :))

    ReplyDelete