மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!
மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!
உலகளவு உயர்த்திச் சொல்ல
நட்பும் உயர்ந்தது...
நண்பர்களும் உயர்ந்தவர்கள்..!
நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?
நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!
மனங்கள் தெளிந்து கூடி
உயிரோடு கலப்பது
நட்பு..!
நம் உணர்வோடு
கலப்பவர்கள்
நண்பர்கள்..!
Post a Comment
natpukku eedu ethuvum illai..
ReplyDeleteநட்பின் சிறப்பை தங்கள் கவிதையின் வாயிலாக சிறப்பாக சொல்லியிருக்கீங்க..! வாழ்த்துகள்.
ReplyDeleteநட்பே.. நீ வாழ்க..!
நட்பின் சிகரமாய்
என்றும் நீ வளர்க..!
நட்புக்கு ஒரு ஜே.
ReplyDeleteநம் உணர்வோடு
ReplyDeleteகலப்பவர்கள்
நண்பர்கள்..!
....
எங்கள் உணர்வோடு கலந்து விட்டது தங்களின் கவிதை..
ம்....ஒவ்வோரு வரிகளிலும் சிநேகிதத்தின் அர்த்தம் தெளிந்த நடையாக ஜொலிக்கிறது. தொடருக..
தோழி அவர்களே
ReplyDeleteநட்புக்காக கவிவரைந்தமைக்கு நன்றிகள்.
"நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!"
இவ்வரிகள் மிகவும் அழகாக அமைந்துள்ளன
நண்பன் இல்லாத மனிதன் இல்லை.,
ReplyDeleteநட்பை சுவாசிக்காத மனதும் இல்லை...,
உன் பணி தொடர என் அன்பு வாழ்த்துக்கள் தோழி......,