எதிர்க் கட்சியானது
எதிர்க்கட்சி
ஆளும் கட்சியானது
ஜனநாயகத்தில்
எதுவும் நடக்கலாம்...!
அப்போது ஆளும் கட்சியில்
மந்திரியாய் இருந்தவர்
இப்போது எதிர்க் கட்சியில்
மந்திரியாய் இருக்கிறார்
ஜனநாயகத்தில்
எதுவும் நடக்கலாம்...!
முலாம் பூசப்பட்ட
வார்த்தைகளை நம்பி
இரவல் கனாக்காணும்
இளவரசர்களே...!!
எச்சில் கண்ணீரால்
எமாற்றிக் கொண்டிருப்பவர்களை
தேர்தல் தேர்வில்
தூக்கி எறியுங்கள்
ஜனநாயகத்தில்
இதுவும் நடக்கலாம்...!
Post a Comment
>>இரவல் கனாக்காணும்
ReplyDeleteஇளவரசர்களே...!!
ஹி ஹி கேட்கவே சந்தோசமா இருக்கு.. ஹி ஹி