Thursday, February 25, 2010

தமிழ்

எங்கோ பிறந்த
ஏனோ வளர்ந்த
ஏதோ ஒரு மொழியல்ல
தமிழ்

சிந்து வெளியின்
சின்னங்கள் கூறும்
தொன்மைத்
தமிழ்

சிந்தனையின்
சிகரங்கள் தூண்டும்
வீரத்தமிழரின்
வித்தைத்
தமிழ்

ஈரேழுலகாழும்
வீரப்புதலவர்களை
பெற்றகம் மகிழும்
தாய்த்
தமிழ்

இலக்கணக் கட்டுடல்
இலக்கியப் பட்டாடை
அழகிய திரு நுதலில்
பொட்டாய் பண்பாடு
இயல் இசை நாடகம்
இலங்கும் ஆபரணமாய்
பூண்ட தமிழ்த் தாயின்
உலகாட்சி
தமிழ்

கருக்கொண்ட
சொற்கள் கண்டதுண்டா?
தமிழில் உண்டு
தினை, பால், வழுவற்ற
செருக்குடன் மிளிரும்
செல்வ மொழி
தமிழ்

விண்ணுலகம் வியக்கும்
கோபுரங்கள்
கண் தவம் செய்த
சிற்ப ஓவியங்கள்
மண்ணில் கவிஎழுதும்
ஆடல் என
இன்னும் பல கலை வளர்த்த
பக்தி மொழி
தமிழ்

வாகை மலருக்கு ஏது
தட்டுப்பாடு
வானம் வரை இல்லை
கட்டுப்பாடு
என வேலும் வாளும்
சரித்திரம் எழுதிய
வீர மொழி
தமிழ்

காற்றை உருக்கி
காதலுக்கு தூதனுப்பி
நாற்று நடுபவரும்
நாடாளுமன்னரும்
போற்றும் குலப்
பண்பு குறையாமல்
பேசி மகிழ்ந்த
காதல் மொழி
தமிழ்

ஆதியோடு அந்தம்
இல்லாத மொழி
அலை மோதும் கடற்கோளும்
அலைக் கழிக்கும் இடம் பெயர்வும்
அழிக்க முடியாத
ஆரோக்கிய மொழி

ஆறாயிரம் ஆண்டு
தொன்மையின் சான்று
இன்னும் உறுதியாய் வாழும்
நூறாயிரம் ஆண்டு.


Post a Comment

4 comments:

  1. ஆறாயிரம் ஆண்டு
    தொன்மையின் சான்று
    இன்னும் உறுதியாய் வாழும்
    நூறாயிரம் ஆண்டு..!!

    தமிழுக்கு இல்லை அழிவு..!!
    மிக்க நன்றி தோழி..!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா..!

    ReplyDelete
  3. அழகாயிருக்கிறது தோழி!
    மரபு நடையும் நயமும் அங்கங்குக் காண்கிறேன்.
    மகிழ்ச்சி!

    ReplyDelete
  4. Kindly visit this link at my Blog for a small article about language:

    http://lingeswaran-ise.blogspot.com/2010/08/blog-post_19.html

    ReplyDelete