Thursday, February 18, 2010

இறுதி வரைக்கும் போராட்டம்...

புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் ஒன்றும் காணவில்லை
உலரும் ஈரத்துணிபோலே
உலகில் மனிதன் பிறப்பதுவும்;
நிலையம் மாறா தொன்றாகி
நிதமும் அல்லல் படுகின்றான்,
தொலைந்து போனதம் வாழ்வதனை
தொடர நினைத்தே அழுகின்றான்.

நெஞ்சில் துளியும் துணிவில்லை
நினைப்பது ஒன்றும் நடவாதே
அஞ்சி அடங்கி போவதனால்
ஆசைக்கு எதுவும் வேலையில்லை
பஞ்சு இத்துப் பறப்பது போல்
பாவிகள் மனமும் மோதுண்டு
மஞ்சள் நிலவும் நிறம்மாறி
மனத்தைக் குடைந்து கவி பாடும்.

பிறக்கும் போது மனிதரிலே
பிறப்பால் வந்த செல்வமெது?
இறக்கும் போது மனிதரிலே
எடுத்துச் சென்ற செல்வமெது?
இம்மைச் சுகத்தில் முதுமை வரை
இறுதி வரைக்கும் போராட்டம்,
இருக்கும் வரைக்கும் இப்பாரில்
இறைவனைத் தொழுது கையேந்து..!!


Post a Comment

1 comment:

  1. >>இம்மைச் சுகத்தில் முதுமை வரை
    இறுதி வரைக்கும் போராட்டம்,

    தோழி ரொம்ப சீரியசா சிந்திச்சிருக்கறாப்ல.. பாவம் அப்பா திட்டிட்டார் போல.. ஹி ஹி

    ReplyDelete