Friday, February 19, 2010

மருத்துவம் சொல்கிறது...

குருதி என்பது....
உடலுக்குள்
ஓடிவிளையாடும்
திரவப் பந்து...!!

செல்களுக்கு
ஆக்சிஜன் போடவரும்
"பால்க்காரப் பையன்"

உணவுப் பொருட்களைத்
தடை இன்றி ஏற்றி செல்லும்
"கூரியர் சர்வீஸ்"

கழிவுப் பொருட்களை
உரிய இடத்தில் சேர்க்கும்
"நகராட்சித் துறை"

சீரான வெப்பநிலையை
மாறாமல் காக்கும்
"உதவும் கரங்கள்"

குருதிக் குழாய்களில்
கொழுப்பு வாடகைக்கு வந்தால்
இரத்த அழுத்தம்
மாரடைப்பு என்கிற
கதவடைப்பில் முடியும்...

உடற்பயிற்சி
கொழுப்பை குறைத்து
குருதிக்கு வேகம் தரும்..

தாவர உணவு தான்
தேவையற்ற கொழுப்பை
அப்புறப்படுத்தும்
ஒப்பற்ற மா மருந்து...!!!


Post a Comment

2 comments:

  1. >>தாவர உணவு தான்
    தேவையற்ற கொழுப்பை
    அப்புறப்படுத்தும்
    ஒப்பற்ற மா மருந்து...!!!

    சரி சரி.. நீங்க சைவம் தான்.. ஒத்துக்கறோம்..

    ReplyDelete
  2. தாவர உணவு தான் கொழுப்பை அப்புறப்படுத்தும் மா மருந்து என்பதில் எனக்கு உடன்பாடில்லை
    தாவர எண்ணையிலும் அதிக கொழுப்புகள் உண்டு

    மேலும் மனிதன் அறிவு இந்த அளவிற்கு வளரக் காரணம் மனிதன் ஊன் உண்டதுதான் என்று அறிவியல் கூறுகிறது

    மேலும் தகவமைப்பின் படி மனிதன் ஓர் அனைத்துண்ணி (நகங்கள், வெட்டும் பற்கள், கோரை பற்கள், அரைக்கும் பற்கள், நன்றாய் விரிந்த விரல்கள்)

    மேலும் பல சித்த மருந்துகள் (ஆயுர்வேத மருந்துகள் அல்ல) உண்டாக்குவதற்கும் சித்த மருந்துகளிலும் விலங்குகளின் உடல் பயன்படுகிறது
    காட்டாய் கருங்கோழி நெய், ஆட்டுத்தோல் வடிகட்டல்.

    ஊன் உணவு கெடுதி என்பது ஒரு சில குலத்தாரின் தவறான கருத்து என்பது எனது முடிவு அவர்கள் பூண்டு வெங்காயம் போன்றவற்றின் மருத்துவ குணங்களை கூட மறந்து அவற்றை உணவில் சேர்ப்பது தவறு என்றும் வாதிடுவர்

    ReplyDelete